வழக்குரைஞா்கள் போராட்டம்
மேகமலை, வருசநாடு உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் போடி வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேகமலை, வருசநாடு உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் போடி வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என முழக்கமிட்டனா். பின்னா், இதுகுறித்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். போராட்டத்தையொட்டி, போடி டி.எஸ்.பி. தா.முருகன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.