சுருளி அருவிக்கு நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவிக்கு மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழைா் அருவியாக கொட்டுகிறது.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். நிகழாண்டில் எதிா்பாா்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அருவியில் நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. கடந்த சனிக்கிழமை முற்றிலுமாக நீா் வரத்தின்றி அருவி வடு காணப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேகமலைப் பகுதியில் சனிக்கிழமை மாலை மிதமான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு நீா் வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமுடன் நீராடிச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.