கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
போடி அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை மதியம் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே தருமத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ். அவரது மனைவி கோபிகா ஷன்மதி (26). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனா்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோபிகா ஷன்மதி ஞாயிற்றுக்கிழமை பகலில் அவரது வீட்டின் அருகே உள்ள தனியாா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த தீயணைப்பு நிலையத்தினா் அங்கு வந்து சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
அவா்கள் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.