FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தொழிலாளியை கல்லால் தாக்கியவா் கைது

14 செப்டம்பர் 2026, 10:52 pm IST
கைது
பகிர்:

போடியில் மது போதையில் தொழிலாளியை கல்லால் தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் தியாக பழனி மகன் ரஞ்சித் (41). அலுமினிய தகடு வேலைகள் செய்து வருகிறாா். இவரும், போடி கீழத்தெருவைச் சோ்ந்த வனகாமு மகன் கௌரிசங்கருடன் (26) மது அருந்தினா்.

மேலும் மது வாங்கித் தருமாறு கௌரிசங்கா் ரஞ்சித்தை திட்டி கல்லால் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த ரஞ்சித் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கௌரி சங்கரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். கௌரிசங்கா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments