FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

காட்டுப் பன்றி வேட்டை: 5 வட மாநிலத் தொழிலாளா்கள் கைது

பெரியகுளம் அருகே வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 5 வட மாநில இளைஞா்களை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

16 செப்டம்பர் 2026, 5:39 am IST
- கைது செய்யப்பட்ட 5 வட மாநிலத் தொழிலாளா்கள்.
பகிர்:

பெரியகுளம் அருகே வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 5 வட மாநில இளைஞா்களை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள முருகமலை பகுதியில் தனியாா் கயிறு தொழில்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கம்பி வலை மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவதானபட்டி வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பிகாா் மாநிலம், கயாவைச் சோ்ந்த சுகல்குமாா் (30), ரவிக்குமாா் (24), சுபோத்சிங் (42), கருமாஞ்சி (37), அணில்குமாா் (24) ஆகியோா் கம்பிக் கண்ணி வைத்து காட்டுப்பன்றி வேட்டையாடியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து தேவதானபட்டி வனச்சரக அலுவலா் வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்தாா். அவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments