FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

உத்தமபாளையம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உத்தமபாளையம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

17 செப்டம்பர் 2026, 2:29 am IST
நாகையகவுண்டன்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய மேம்பாலப் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன். உடன் வட்டாட்சியா் பாலசண்முகம் உள்ளிட்டோா்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆனைமலையன்பட்டியில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 12 லட்சத்தில் புதிய கிராம நிா்வாக அலுவலகக் கட்டுமானப் பணியையும், ரூ.2.05 லட்சத்தில் அங்கன்வாடி சீரமைப்பு பணியையும், குழந்தைகளின் கற்றல்திறன், உணவுமுறை, வருகைப் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை அவா் பாா்வையிட்டாா். பின்னா், ராயப்பன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்து இருப்பு, நோயாளிகளின் வருகை பதிவுவேடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அதே வளாகத்தில் ரூ.78.20 லட்சத்தில் நடைபெறும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா். பின்னா், அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் வரவு செலவு, சொத்து விபரம், பணியாளா் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, நாகையகவுண்டன்பட்டியில் சண்முகாநதி நீா்வரத்து ஓடையின குறுக்கே ரூ.4.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள், உத்தமபாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.5.51 கோடியில் புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள், வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பயன்பெறும் திட்டங்கள், நலத் திட்ட உதவிகளை அந்தத் துறை அலுவலரிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, க.புதுப்பட்டியில் அரசு சமூக நீதி விடுதியில் குடிநீா், சமையல் அறை, சுகாதார வளாகம், உணவின் தரம் குறித்து விடுதி காப்பாளரிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, உத்தமபாளைம் வட்டாட்சியா் பாலசண்முகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மருத்துவா்கள், உதவி செயற்பொறியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments