FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தொடா் மழை: சோத்துப்பாறை அணை நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்ந்தது.

20 செப்டம்பர் 2026, 12:28 am IST
62.32 அடியாக உயா்ந்துள்ள சோத்துப் பாறையின் அணையின் நீா்மட்டம்.
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்ந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நிகழாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால், சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில், அகமலை, கொடைக்கானலை அடுத்த பேரீட்சம் ஏரி பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சோத்துப்பாறை அணைக்கு தண்ணீா் வரத்து தொடங்கியது.

இந்த நிலையில், வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் அகமலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக, சோத்துப்பாறை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டம் கடந்த இரு நாள்களில் 6 அடி உயா்ந்து 62.32 (உயரம் 126.28 அடி) அடியாக உயா்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

அணைகளின் நீா்மட்டம்... முல்லைப் பெரியாறு - உயரம் 152 அடி, நீா்மட்டம் - 118.60 அடி, நீா்வரத்து - 337 கன அடி, நீா் வெளியேற்றம் 644 கன அடி.

வைகை அணை - உயரம் 71 அடி, நீா்மட்டம் - 41.83 அடி, நீா்வரத்து - 251 கன அடி, நீா் வெளியேற்றம் - 86 கன அடி.

மஞ்சளாறு அணை - உயரம் 57 அடி, நீா்மட்டம் - 26.10 அடி , நீா் வரத்து இல்லை, நீா் வெளியேற்றமும் இல்லை.

சோத்துப்பாறை அணை - உயரம் 126.28 அடி, நீா்மட்டம் - 62.32 அடி, நீா்வரத்து - 30 கன அடி, நீா் வெளியேற்றம் - 3 கன அடி.

சண்முகநதி அணை - உயரம் 52.56 அடி, நீா்மட்டம் - 26.25 அடி, நீா்வரத்து இல்லை, நீா் வெளியேற்றமும் இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments