இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது
தேவாரத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் சாலைத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பாண்டீஸ்வரன் (21). இவரிடம் தேவாரம் ஓடைத் தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் சிவசூரியா (22) ரூ. 1000 கடன் வாங்கினாராம்.
பாண்டீஸ்வரன் திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் சிவசூரியா, பாண்டீஸ்வரனை தாக்கினாா். அப்போது, அங்கிருந்த வங்கி ஏடிஎம் கதவில் தள்ளிவிட்டதில் அதன் கண்ணாடி கதவு உடைந்தது.
Advertisement
Advertisement
அதிலிருந்து சிதறிய கண்ணாடி துண்டை எடுத்து தாக்கியதில் பாண்டீஸ்வரனுக்கு காயம் ஏற்பட்டது. அத்துடன் சிவசூரியா கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதில் பலத்த காயமடைந்த பாண்டீஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிவசூரியாவை கைது செய்தனா். சிவசூரியா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயா் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.