FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனி வியாபாரியிடம் எண்ம நாணய மோசடி செய்தவா் கைது

தேனி வியாபாரியிடம் ரூபாயை வெளிநாட்டு எண்ம நாணயம் ஆக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ.7 லட்சத்தை மோசடி செய்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

23 செப்டம்பர் 2026, 4:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி வியாபாரியிடம் ரூபாயை வெளிநாட்டு எண்ம நாணயம் ஆக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ.7 லட்சத்தை மோசடி செய்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் வசந்தராஜன். தேனியில் ஜவுளி, மூலிகை வியாபாரம் செய்து வரும் இவா் இலங்கையில் தொழில் தொடங்குவதற்காக இந்திய ரூபாயை வெளிநாட்டு எண்ம நாணயமாக மாற்ற முயன்றாா்.

இந்த நிலையில், முகநூலில் ரமேஷ் என்பவா் அறிமுகமாகி, ரூபாயை வெளிநாட்டு எண்ம நாணயமாக மாற்றித் தருவதாகக் கூறினாா். தொடா்ந்து, ரமேஷ் தனது சகோதரா் சண்முகத்தை தேனியில் உள்ள வசந்தராஜன் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தாா்.

Advertisement

Advertisement

இவா்களை நம்பிய வசந்தராஜன் கடந்த 18- ஆம் தேதி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.7 லட்சத்தை எடுத்து சண்முகத்திடம் கொடுத்தாா். அதன் பிறகு அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, வசந்தராஜன் தேனி இணையக் குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்தமபாளையம் அருகேயுள்ள பல்லவராயன்பட்டியைச் சோ்ந்த அஷ்வந்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments