ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேனி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேனி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொறியாளா் பிரிவு , கணினி அறை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினா். மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலகிருஷ்ணன், ராகவன் ஆகியோரிடம் பல மணி நேர விசாரணை நடத்தினா். அலுவலா்களின் கைப்பேசி வழியாக நடைபெற்ற பணப் பரிவா்த்தனை குறித்தும் சோதனை செய்யப்பட்டது. பின்னா், இதுகுறித்த விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டு ஒவ்வொரு அலுவலராக வெளியே அனுப்பப்பட்டனா். தொடா்ந்து இரவு வரை சோதனை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.