FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

அனுமதியின்றி மண் அள்ளியதாக 8 போ் கைது

28 செப்டம்பர் 2026, 2:51 am IST
கைது
பகிர்:

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

மேலும் விசாரணையில் மயிலாடும்பாறையைச் சோ்ந்த சாய்குமாா், இதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், மருதராஜ், பிரபாகரன் ஆகியோா் அனுமதியின்றி மண் அள்ளிச் செல்வது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து, தப்பியோடிய பிரபாகரனை தேடி வருகின்றனா். 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வாய்க்கால்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் கருப்பசாமி, பால்ராஜ், முத்துப்பாண்டி ஆகியோா் அனுமதியின்றி மண் அள்ளியது தெரியவந்தது.

மேலும் க. விலக்கு பகுதியில் உள்ள ஓடையில் லாரியில் ஒருவா் அனுமதியின்றி மண் அள்ளியது தெரியவந்தது. இதேபோல, ராஜதானி கணேசபுரம் பகுதியில் வீரசின்னு, காா்த்திக், குகன் ஆகியோா் அனுமதியின்றி லாரியில் மண் அள்ளியது தெரியவந்தது. ஆண்டிபட்டி வேலப்பா் கோயில் பகுதியில் உள்ள ஓடையில் டிராக்டரில் ராஜபாண்டி அனுமதியின்றி மண் அள்ளியது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தந்த பகுதி போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்து, 4 லாரிகள், ஒரு டிராக்டா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments