விருதுநகரில் மொபட் மீது லாரி மோதி இளைஞர் சாவு
விருதுநகரில் புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் (மொபட்) மீது லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
விருதுநகரில் புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் (மொபட்) மீது லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் விஜயகுமார் (22). இவர், சொந்த வேலை காரணமாக புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு விருதுநகருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். விருதுநகர் தலைமை அஞ்சலகம் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், விஜயகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான விருதுநகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.