FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகாசியில் 73 இடங்களில் விநாயகர் சிலைகள்

சிவகாசியில் இந்து அமைப்பினர் சார்பில் 73 இடங்களில் விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சிவகாசியில் இந்து அமைப்பினர் சார்பில் 73 இடங்களில் விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
சிவகாசியில் இந்து அமைப்புக்கள் சார்பில் சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் 23 சிலைகளும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைப் பகுதியில் 27 சிலைகளும், மாரனேரி காவல் நிலைய எல்லைப் பகுதியில் 9 சிலைகளும், திருத்தங்கல் காவல் நிலைய எல்லைப் பகுதியில் 8 சிலைகளும், எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் 6 சிலைகளும் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதைத் தொடந்து வியாழக்கிழமை அச்சிலைகளுக்கு அருகம்புல் மாலை அமைக்கப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சிலைகள் வரும் 16 ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சிவகாசி 
காவல் கண்காணிப்பாளர் தி.பிரபாகரன் சிலை அமைப்பாளர்களுக்கு விடுத்துள்ள சுற்றிக்கையில், காலை மற்றும் மாலைவேளைகளில் இரண்டு மணிநேரத்திற்கு மட்டுமே பூஜைக்காக ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பாளர்கள் சிலைகளின் பாதுகாப்பிற்கு ஆள்களை நியமித்துக் கொள்ள வேண்டும். 
சிலைகளை கரைக்க ஊர்வலமாக செல்லும் போது,காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள வழிதடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments