FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

படந்தால் சந்திப்பில் உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்கக் கோரிக்கை

கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் பகுதியில் உள்ள படந்தால் சந்திப்பு நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது. இந்த நான்கு வழிச்சாலையை கடந்து தான் படந்தால், தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் இந்த நான்கு வழிச்சாலை மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது. இந்த நான்குவழிச்சாலை படந்தால் சந்திப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் உயர்மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டும் ஒளிர்ந்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த உயர்மின் கோபுர விளக்கு ஒளிராமல் காட்சிப் பொருளாக உள்ளது. 
பின்னர் சமூகஆர்வலர்களின் தொடர் கோரிக்கையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் உயர்மின் கோபுர விளக்கு பழுது பார்க்கப்பட்டு ஒரு வாரம் மட்டும் எரிந்தது. பின்னர் மீண்டும் மின்விளக்கு பழுதடைந்து படந்தால் சந்திப்பு பகுதியே இருளில் முழ்கியது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த படந்தால் சந்திப்பு தான் மதுரை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பேருந்து நிறுத்தமாகவும் உள்ளது. 
இதனால் இந்த பகுதியில் இரவு நேரத்தில் இருளில் நின்றபடி  பயணத்தை தொடர வேண்டிய சூழ்நிலை பேருந்து பயணிகளுக்கு உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி படந்தால் சந்திப்பில் உள்ள உயர்மின்கோபுர விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments