"பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்'
பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான்பாண்டின் தெரிவித்தார்.
பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான்பாண்டின் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் ஜீயர் மடத்திற்கு புதன்கிழமை வந்த ஜான்பாண்டின் சுமார் 35 நிமிடங்கள் ஜீயர் சுவாமிகளுடன் தனியே சந்தித்துப் பேசினார். பின்னர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதன் முதலாக ஆண்டாள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இருந்தாலும் சில இடங்களில் தவறு நடைபெறுகிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. பாஜக, அதிமுகவை இயக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதா, அல்லது கூட்டணி வைப்பதா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.