FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விருதுநகர்- மல்லாங்கிணறு சாலையில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

விருதுநகர்- மல்லாங்கிணறு சாலையின் இருபுறமும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விருதுநகர்- மல்லாங்கிணறு சாலையின் இருபுறமும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
 விருதுநகர் - மல்லாங்கிணறு செல்லும் சாலையில் ரோசல்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருவதால் இப்பகுதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பாண்டியன் நகரில் சாலையின் இருபுறமும் 10-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் உள்ள கோழிக்கழிவுகள் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதில்லை. மேலும், இக்கழிவுகளை சாலையின் இருபுறமும் கொட்டி விடுகின்றனர். இதனை ஊராட்சி சார்பிலும் அப்புறப்பறப்படுத்துவதில்லை. இதன் காரணமாக அச்சாலையில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பாண்டியன் நகர் குடியிருப்போர் சார்பில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, கோழிக் கழிவுகளை சாலைகளை கொட்டுவதை தடுப்பதுடன், சுகாதாரத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments