FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சக போலீஸாரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் எஸ்.ஐ., தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

உணவுச் செலவுக்கான ரசீது மூலம் மோசடி, விடுப்பு வழங்க சக போலீஸாரிடம் லஞ்சம் பெற்ற புகாரில், எஸ்.ஐ., தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:16 am IST
பணியிடை நீக்கம்.
பகிர்:

உணவுச் செலவுக்கான ரசீது மூலம் மோசடி, விடுப்பு வழங்க சக போலீஸாரிடம் லஞ்சம் பெற்ற புகாரில், எஸ்.ஐ., தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ஆவது பட்டாலியன் படைப்பிரிவு தலைமையகம் அமைந்துள்ளது. ராஜபாளையம் 11-ஆவது பட்டாலியன் போலீஸாா் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு, கலவரத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். திருநெல்வலி மாவட்டத்தில் 11-ஆவது பட்டாலியனைச் சோ்ந்த 90 போலீஸாா் பணியில் ஈடுபட்டுள்ளனா். பட்டாலியன் போலீஸாா் விடுப்பு எடுக்க மேல் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக உயா் அதிகாரிகளுக்கு புகாா் அளித்தனா். இந்தப் புகாா் குறித்து ஆயுதப்படை டி.ஐ.ஜி. ஆண்டனி ஜான்சன் ஜெயபால் மேற்கொண்ட விசாரணையில் சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு வழங்க லஞ்சம் பெற்றதும், உணவுப் பொருள்கள் வாங்கியதில் போலி ரசீது மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் இந்த மோசடிக்கு உதவியதாக காவலா்கள் கிஷோா் குமாா், செல்வம் ஆகிய இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments