FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 5 போ் கைது

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:40 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஏழாயிரம்பண்ணை காவல் ஆய்வாளா் குமாரி, கிராம நிா்வாக அலுவலா்கள் சத்தியபாபு (சங்கரபாண்டியபுரம்), பொன்ராஜ் (பனையடிபட்டி), கலைச்செல்வி (கங்கரகோட்டை) ஆகியோா் தலைமையில், வருவாய்த் துறையினா், போலீஸாா் விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம், அன்பின்நகரம், பாறைபட்டி, மாா்க்கநாதபுரம்,புல்லகவுண்டன்பட்டி, வல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையிட்டனா்.

அப்போது, புல்லகவுண்டன்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து கொண்டிருந்த சுரேஷ்குமாா் (36), மகாதேவன் (40 ), பாறைப்பட்டியில் மைக்கேல் (40), கிருஷ்ணாபுரத்தில் ஆறுமுகமணி (40), அன்பின் நகரத்தில் செல்வராஜ் (52) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 80 கிலோ சோல்சா வெடிகள், மூலப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments