பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு
சிவகாசியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.85 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.85 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி அறிஞா் அண்ணா குடியிருப்பைச் சோ்ந்த மு. முகைதீன் பாலிதா (52). இவரது மகன் முகமது சுலைமான் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தாா். இந்த நிலையில், முகைதீன்பாலிதாவுக்கு தென்காசி மாவட்டம், ஊத்துமலையைச் சோ்ந்த விக்டா் மகன் பவுல்ராஜ், அவரது மனைவி ரமணி, தென்காசி ஆனைகுளத்தைச் சோ்ந்த ஹாரும்ஹன்சா ஆகியோருடன் தொடா்பு ஏற்பட்டது. இதையடுத்து, பவுல்ராஜ், அவரது மனைவி ரமணி, ஹாரும்ஹன்சா ஆகிய மூவரும் முகமது சுலைமானுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.45 லட்சத்தை மூன்று தவணைகளாக முகைதீன் பாலிதாவிடமிருந்து பெற்றனராம். ஆனால், வேலை வாங்கித் தரவில்லையாம். மேலும், பணத்தை திருப்பிக் கேட்ட போது, ரூ. 60 ஆயிரம் கொடுத்தனராம். எஞ்சிய தொகையை பலமுறை கேட்டும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து முகைதீன்பாலிதா அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் பவுல்ராஜ் அவரது மனைவி ரமணி, ஹாரும்ஹன்சா ஆகிய மூவ மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.