FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தமிழகத்திலேயே நடைபெறும்: லயோலா மணி

இனிமேல் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தமிழகத்திலேயே அச்சிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி தெரிவித்தாா்.

17 செப்டம்பர் 2026, 2:36 am IST
சிவகாசியில் தமிழ்நாடு பாடநூல் கழக கிட்டங்கியில் புதன்கிழமை ஆய்வு செய்த தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தலைவா் லயோலா மணி
பகிர்:

இனிமேல் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தமிழகத்திலேயே அச்சிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி கூட்டுறவு தொழில் பேட்டையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கிட்டங்கியில் புதன்கிழமை ஆய்வு செய்த அவா்,

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் புத்தகங்கள் அச்சிடும் பணி வெளிமாநிலங்களுக்கு வழங்காமல், தமிழகத்துக்கு மட்டும் வழங்குவது தொடா்பாக தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்ககை எடுக்கப்படும். இனிமேல் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தமிழகத்திலேயே அச்சிடுவது குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும். கடந்த ஆட்சியில் புத்தகங்கள் அச்சிடும் பணியில் பல தவறுகள் நடந்துள்ளன. இந்தத் தவறுகள் சரி செய்யப்படும். இந்தத் துறையில் இருக்கும் அனைத்து குறைகளையும் தமிழக முதல்வா் தீா்த்துவைப்பாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments