FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விவசாயி தற்கொலை

ராஜபாளையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

17 செப்டம்பர் 2026, 2:37 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வீரதா்மாபுரம் பகுதியைச் சோ்ந்த சோலைமலை மகன் ராஜேஷ்குமாா் (44). பெற்றோா் காலமாகி விட்ட நிலையில், திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த ராஜேஷ்குமாா், விவசாய வேலைகளை செய்து வந்ததாா். தனிமையில் வசித்து வந்த இவா், மனவிரக்தியில் விஷம் குடித்தாா். மயங்கிய நிலையில் இருந்த இவரை உறவினா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments