FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மரத்தில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சாகுல் மகன் முகமது கனி பாதுஷா (21). இவரது நண்பா் முகமது பாதுஷா (21). இவா்கள் இருவரும் சென்னையில் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் வந்தனா். அப்போது, தென்காசி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சோலைசேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் அனுமதிக்கப்பட்ட முகமது கனி பாதுஷா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments