FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய இளைஞர் கைது

காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர் .

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர் .
மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி, திருநள்ளாறு காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அறிவுறுத்தலின்படி,  உதவி ஆய்வாளர் ஐ. பிரவீன்குமார் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை திருநள்ளாறு புறவட்டச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நாகூரை சேர்ந்த ஷேக் ராஸித் அலி (எ) ராஸித் (19) என்பவரிடம் ஆவணங்கள் கோரியபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருநள்ளாறு பகுதி தேனூரில் திருடப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
மேலும், அவர் திருநள்ளாறு பகுதியில் கடந்த 2 -ஆம் தேதி மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடியதையும்,  தஞ்சாவூரில் ஆக. 24 -ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இந்த 3 மோட்டார் சைக்கிளையும் போலீஸார் புதன்கிழமை மீட்டு வந்தனர். இவர் மேலும் காரைக்கால், தமிழகப் பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டாரா? எனவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாகனச் சோதனையின்போது நடைபெற்ற விசாரணையில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடிய குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் பாராட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments