FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குழந்தைகளுக்கு சத்தான உணவு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமை பேரணி நடத்தினர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமை பேரணி நடத்தினர்.
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், பிரதம மந்திரியின் ராஷ்ட்ரிய போஷான் அபியான் என்ற திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் சுமார் 300 பேர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். ஆட்சியரகத்திலிருந்து காமராஜர் நிர்வாக வளாகம் வரை சென்ற பேரணியை, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு தரவேண்டும். கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பள்ளி செல்லும் சிறார்கள் சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, அம்பேத்கர் வீதி, மாதா கோயில் வீதி, நேரு வீதி வழியாக காமராஜர் நிர்வாக வளாகம் சென்றடைந்தனர்.
இந்த பேரணியில் தொடக்க நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி பி. சத்யா மற்றும் அதிகாரிகள், துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments