FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பர்னிச்சர் கடையில் தீ விபத்து

காரைக்காலில் வியாழக்கிழமை பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பர்னிச்சர் பொருள்கள் சேதமடைந்தன. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

காரைக்காலில் வியாழக்கிழமை பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பர்னிச்சர் பொருள்கள் சேதமடைந்தன. 
காரைக்கால் பகுதி மனோகரன் என்பவர் மாரியம்மன் கோயில் வீதி, திருநள்ளாறு சாலை சந்திப்பில் பர்னிச்சர் நிறுவனம் கடை நடத்தி வருகிறார். கடையின் முதல் மாடியில் கீற்று கொட்டகை அமைத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார். இதில், குளிர்சாதன இயந்திரங்கள், காற்றாடி, நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பர்னிச்சர் பொருள்களை வைக்கப்பட்டிருந்தன.  
இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கமாக கடையை திறந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது,  திடீரென மேற்கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், பர்னிச்சர் பொருள்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments