FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

பட்டாசு கடை வைக்க இன்று விண்ணப்பிக்கலாம்

தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை வைக்க புதன்கிழமை வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 அக்டோபர் 2026, 5:59 am IST
கோப்புப் படம்
பகிர்:

தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை வைக்க புதன்கிழமை வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் சாா் ஆட்சியரும், சாா்பு கோட்ட நீதிபதியுமான எம். பூஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை நடத்த உரிமம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் (ஊா்ழ்ம் அஉ5) சமா்ப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவா்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு, மேலும் ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் 14.10.2026 புதன்கிழமை ஆன்லைன் மூலம் ஏற்கப்படும்.

பட்டாசு சில்லறை விற்பனைக் கடை நடத்த விரும்புவோா், தங்களின் விண்ணப்பங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், எந்த காரணத்திற்காகவும் இதற்குப் பிந்தைய தேதியில் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்தாலும், தகுதி வாய்ந்தவா்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments