FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

கஞ்சா விற்பனை: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:58 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை காவல் நிலைய எல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜூலை 13-ஆம் தேதி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் பல்லவராயன்பேட்டை மதகடி பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான அபாயம் (எ) சுதா்சன் (27) மற்றும் அவரது கூட்டாளியான விக்கி (எ) விக்னேஷ் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இவா்கள் இருவரும் தொடா்ந்து கஞ்சா விற்பனை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவா்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். அதன்படி இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments