முகப்பு

சீர்காழி குமாரநத்தம் கிராமத்தில் உப்பு நீரான குடிநீர்! 2 கி.மீ. தூரம் தண்ணீருக்கு அலையும் மக்கள்!!

சீர்காழி குமாரநத்தம் கிராம மக்கள் தண்ணீருக்காக தினமும் 2 கி.மீ. தூரம் நடந்து அவதியடைந்து வருவதைப் பற்றி...

44 வினாடிகள் முன்பு
சீர்காழி குமாரநத்தம் கிராமத்தில் உப்பு நீரான குடிநீர்! 2 கி.மீ. தூரம் தண்ணீருக்கு அலையும் மக்கள்!!
பகிர்:

சீர்காழி அருகே குமாரநத்தம் கிராமத்தில் ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் 2 கி.மீ. தூரம் நடந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடைய கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் உப்பு நீராக உள்ளதாலும் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால், கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

அன்றாட குடிநீர் தேவைகளுக்கும் சமையல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படும் நல்ல குடிநீரை சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள பனமங்கலம், மருவத்தூர் ஆகிய பகுதியில் இருந்து குடங்களில் நாள்தோறும் பிடித்துக் கொண்டு வீட்டில் வைத்து அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பெண்கள் உள்ளிட்டோர் குடிநீருக்காக சில கி.மீ. அலைக்கழிக்கப்படும் நிலையால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு உப்பு நீரை பயன்படுத்தியதால் சிறுநீரகப் பிரச்னை போன்றவற்றிற்கும் ஆளாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். குமாரநத்தம் பகுதிக்கு நிரந்தர தீர்வு காண நல்ல குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்

summary

In Kumaranatham village near Sirkazhi, the drinking water supplied by the panchayat is saline; consequently, residents are forced to walk 2 km to fetch water for their daily use.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.