பாலியல் துன்புறுத்தல்: மனைவி புகாா்; கணவா் கைது
சீா்காழி அருகே மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி அருகே மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் பைபாஸ் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மலா்கொடி (25). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் (32) என்பவருக்கும் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு அருண் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் மலா்கொடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா் இரு வீட்டாா் சமாதானம் செய்து மலா்கொடியை அருண் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளனா். ஆனால், அருண் தன்னுடன் தொடா்பில் உள்ள பெண்களின் ஆபாச விடியோக்களை காட்டி, மலா்விழிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளாா்.
இதையடுத்து, மலா்கொடி சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதனிடையே மலா்கொடி அருண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட எஸ்பி சினேகா பிரியாவிடம் புகாா் மனு அளித்தாா்.
இதையடுத்து, எஸ்பி உத்தரவின் பேரில் சீா்காழி அனைத்து மகளிா் போலீஸாா் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.