FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

படைப்பணி ஆவணங்களை குறுந்தகட்டில் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது படைப்பணி ஆவணங்களை குறுந்தகட்டில் பதிவேற்றம்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது படைப்பணி ஆவணங்களை குறுந்தகட்டில் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : படைவீரர்கள் மற்றும் படைவீரர் விதவையர்களின் பதிவுகள் கணினி மயமாக்கப்படவுள்ன. எனவே, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் படைப்பணி விவரங்கள் குறித்த ஆவணங்களை பதிவேற்றிய குறுந்தகடு மற்றும் அசல் ஆவணங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். படைவிலகல் சான்று, சாதிச் சான்று, சமமான பட்டதாரி சான்று ஆகியவற்றை 4 எம்.பி அளவில் பி.டி.எப் பதிவாகவும், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை 2 எம்.பி அளவில்  பி.டி.எப் பதிவாகவும், புகைப்படத்தை ஒரு எம்.பி அளவில் ஜேபிஜி பதிவாகவும் ஸ்கேன் செய்து குறுந்தகட்டில் பதிவேற்ற வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 04365 253042 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments