FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பாலிடெக்னிக் மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை

நாகை, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணி வாய்ப்புப் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 22 ஆகஸ்ட் 2020, 10:09 pm IST
பகிர்:


நாகப்பட்டினம்: நாகை, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணி வாய்ப்புப் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் இறுதியாண்டு படித்த மாணவா்களுக்கான கல்லூரி வளாக நோ்காணல் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 25-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நோ்காணலில் பங்கேற்றிருந்தன. இதில், பாலிடெக்னிக் மாணவா்கள் 397 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரித் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா் பணிக்குத் தோ்வு பெற்ற மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments