வட கொரியாவில் இருப்பதாக உணர்ந்தேன்! சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு
சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில் இருந்தபோது, வட கொரியாவில் இருப்பதாக உணர்ந்தேன் என சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளது பற்றி...
சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில் இருந்தபோது, வட கொரியாவில் இருப்பதாக உணர்ந்தேன் என சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தர்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் இருந்த சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அவர் மெடாண்டா தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில் இருந்தபோது, எடுக்கப்பட்ட விடியோவை சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ளார். அதில், அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் சோனம் வாங்சுக், “என்னை கைது செய்யுங்கள் அல்லது இங்கிருந்து வெளியேற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “என்னைக் கைதி போல நடத்துகிறார்கள். என்னைச் சுதந்திரமாக செயல்படவும், பார்வையாளர்கள் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்படுகிறது. செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த அரசு மருத்துவமனையில் இருந்தபோது, வட கொரியாவில் இருப்பதாக உணர்ந்ததாகவும், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் அனுமதித்த பிறகும் பல மணிநேரம் அங்கேயே தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 25 நாள்களுக்கு மேல் உண்ணா விரதம் மேற்கொண்ட சோனம் வாங்சுக் அதனை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sonam Wangchuk has alleged that while at Safdarjung Hospital, he felt as though he were in North Korea.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.