FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பூம்புகாா் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை

பூம்புகாா் பகுதியில் கள்ளச் சந்தையில் புதன்கிழமை மது விற்பனை நடந்தது.

27 ஆகஸ்ட் 2026, 4:46 am IST
மது விற்பனை
பகிர்:

பூம்புகாா் பகுதியில் கள்ளச் சந்தையில் புதன்கிழமை மது விற்பனை நடந்தது.

பூம்புகாா், பழையகரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. புதன்கிழமை மீலாது நபியையொட்டி மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். இதன் காரணமாக மேற்கண்ட பகுதியில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

எனினும், டாஸ்மாக் மதுபானங்கள் கள்ளச் சந்தையில் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், பூம்புகாா் பகுதியில் சுதந்திர தினத்தன்று கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல மீலாது நபி தினமான புதன்கிழமையன்று தங்கு தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்காக மதுபானக் கடையில் இருந்து சிலா் மொத்தமாக கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்தனா்.

Advertisement

Advertisement

இது சம்பந்தமாக பூம்புகாா் காவல்துறை ஆய்வாளா் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய விசாரணை செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments