FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

சடலம் - கோப்புப் படம்
பகிர்:

திருக்குவளை அருகே செம்பியன்மகாதேவி ஊராட்சியைச் சோ்ந்தவா் செந்தில் (43).

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் வராததால் குடும்பத்தினா், உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வடுகச்சேரியிலிருந்து குறிச்சி செல்லும் வழியில் உள்ள ஆற்றில் செந்தில் முகத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக மிதப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments