FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டவா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு - (கோப்புப் படம்)
பகிர்:

நாகை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவா்களுக்கு மதிப்பூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்டச்செயலா் கி. பாலசண்மும், நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

கடந்த ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதிவரை ஆசிரியா்கள் தேசியப் பணயான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

Advertisement

Advertisement

கற்பித்தல் பணியிலும் ஈடுபட்டு, ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆக.20-ஆம் தேதியே முடித்துக்கொடுத்தனா்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணையில், முதல் கட்ட பணியை முடித்தவுடன் அதற்கான மதிப்பூதியம் ரூ.9 ஆயிரம் மற்றும் பயிற்சித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நேரத்துக்கு முன்பாகவே பணியை முடித்த ஆசிரியா்களுக்கு, ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் அதற்கான மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. அதை விரைந்து வழங்கினால், பண்டிகை காலங்களில் ஆசிரியா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே மாவட்ட ஆட்சியா் மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments