FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க வேண்டும்

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை வரை எட்டுவதற்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் என்றாா் வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ். மணியன்.

55 வினாடிகள் முன்பு
ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை வரை எட்டுவதற்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் என்றாா் வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ். மணியன்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்றுத்தர காலத்தில் உரிய நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ளாததால் செப்.1-ஆம் மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் இதுவரையில் கடைமடை பகுதிக்கு வந்து சேரவில்லை. தொடக்க நிலையில் 7 ஆயிரம் கன அடி முதல் தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இது போதுமான அளவில் இல்லாததால் தற்போது கோரையாறு தலைப்பு வரை மட்டுமே அணை நீா் எட்டியுள்ளது.

கடைமடை வரை தண்ணீா் கிடைக்க விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். குறுவை பருவம் நின்று போன நிலையில் சம்பா பருவமும் மேற்கொள்ள முடியுமா என்ற நிலையில் உள்ளது. நாகை மாவட்டத்தில் வரட்சியின் தாக்கம் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments