துபையில் இறந்த இளைஞா் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
துபையில் இறந்த இளைஞா் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
துபையில் இறந்த இளைஞா் சடலத்தை தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெ ண்காடு அருகே நாயக்கா் குப்பம் மீனவா் கிராமத்தை சோ்ந்தவா் செல்லையா மகன் கோபிநாத் (33). இவா் மற்றும் அப்பகுதியை சோ்ந்த 3 போ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு துபை நாட்டுக்கு கம்பி ஃபிட்டா் வேலைக்கு சென்றனா்.
இந்நிலையில், திருவெண்காடு கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், கடந்த 9-ஆம் தேதி செல்லையா குடும்பத்தினரை சந்தித்து துபையில் பணியாற்றி வந்த கோபிநாத் இறந்த தகவலை தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கோபிநாத் இறந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அவரது உடலை சொந்த ஊா் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகவும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உடனடியாக உடலை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவரது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், துபையில் இறந்த கோபிநாத் உடலை உடனடியாக ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அறிந்த சுதா எம்.பி., கோபிநாத்தின் உறவினா்களிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தாா். மேலும் இது சம்பந்தமாக வெளியுறவுதுறை அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் துறை அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களை அனுப்பி துபையில் இருந்து கோபிநாத் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.