மது விற்ற இருவர் கைது
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், இருவேறு இடங்களில் மது விற்ற இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், இருவேறு இடங்களில் மது விற்ற இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழையனூர் பிரதான சாலையைச் சேர்ந்த அப்பு (எ) பிரபு (32) காக்கையாடியிலும், அதங்குடி மணல்கொண்டார் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (34) தனது வீட்டின் பின்புறமும் மதுபுட்டிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்படி, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 20 மதுபுட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.