FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் விவரங்களை அளிக்க வேண்டும்'

மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக செப்.20-ஆம்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக செப்.20-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீன்பிடிப்பு மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில் மேற்கொள்பவர்களின் நலவாழ்வுக்காக தமிழ்நாடு மீனவர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. மீனவர் நலவாரியத்தில் கடல் மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில் செய்பவர்கள் உறுப்பினர்களாக தகுதியுடையவர்கள்ஆவர். திருவாரூர் மாவட்டத்தில் மீனவர் நலவாரியத்தில் இதுவரை 6024 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் உறுப்பனர்களின் முழு விவரங்கள் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே உறுப்பினராக உள்ள பயனாளிகளின் விவரங்களை 38 கலங்கள் அடங்கிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். படிவம் அளிப்பவர்களின் விவரங்கள் மட்டுமே கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை 2,228 படிவங்கள் மட்டுமே பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,796 உறுப்பினர்களிடமிருந்து 38 கலங்கள் அடங்கிய படிவம் பெற வேண்டும்.  
எனவே, மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக செப். 20-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கட்டடத்தில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புதிய படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். உரிய தேதிக்குள் புதிய படிவம் அளிக்காதவர்களின் விவரங்கள் மீனவர் நலவாரியத்திலிருந்து தானாகவே ரத்தாகிவிடும். அவர்கள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் புதிய உறுப்பினர்களாகவே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments