FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மொபட் மீது வேன் மோதி விபத்து: மேலும் ஒருவர் சாவு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில், மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில், மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நீடாமங்கலம் அருகே உள்ள வடகாரவயல் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (50). விவசாயி. இவர் மொபட்டில் கானூரைச் சேர்ந்த சங்கரன் (40) என்பவருடன் மன்னார்குடி நோக்கி கடந்த 6-ஆம் தேதி இரவு  சென்று கொண்டிருந்தார். ராயபுரம் பகுதியில் சென்றபோது, பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த வேன் ஒன்று மொபட் மீது மோதியது. இதில், ஏகாம்பரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த சங்கரன், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments