ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்
தூத்துக்குடி துறைமுக சரக்குப் போக்குவரத்தைக் கூடுதலாகப் பெற ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி துறைமுக சரக்குப் போக்குவரத்தைக் கூடுதலாகப் பெற ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆண்டுக்கு 365 லட்சம் டன் சரக்கு கையாள்வதில் 6 லட்சம் டன், சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது. இத்துறைமுகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு சரக்கு ரயில் வீதம் அவ்வப்போது சுண்ணாம்புக்கல் மற்றும் நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகின்றன. 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தூத்துக்குடி துறைமுக முதல்கட்ட விரிவாக்கப் பணிகள் ரூ.13,775 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் 350 லட்சம் டன் நிலக்கரியைக் கூடுதலாக இந்தத் துறைமுகம் கையாள இருக்கிறது.
இதையொட்டி, பலவித உள்கட்டமைப்புகள் ரயில்வேக்கு தேவைப்படுகின்றன. ஆகையால், தூத்துக்குடி துறைமுக சரக்கு போக்குவரத்தைக் கூடுதலாகப் பெற ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.