வாக்குச்சாவடி குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்பு
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுக சார்பில் திருவாரூர் சட்டப் பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருவாரூர் ஒன்றியம், தண்டலை ஊராட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமை வகித்து பேசியது:
தமிழகம் முழுவதும் வாக்காளர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. இதில், விடுபட்ட வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் கண்டறிந்து, அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற அனைத்து முயற்சிகளையும் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதுபோல், வாக்குச்சாவடி தோறும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களது பகுதியில் மக்களை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவான நிலையை உருவாக்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான பணிகளை இப்போதே பூத் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதேபோல், திருவாரூர் நகரில் கேக்கரை பகுதி உள்ளிட்ட 6 இடங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து கூட்டங்களிலும் அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டு, ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், அதிமுக மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் பொன். வாசுகிராம், ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.