திருவாரூர்

பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

DIN

நீடாமங்கலம்: பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரத்துறை வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூா் சாா்ந்த நீடாமங்கலம் வட்டம் காளாஞ்சிமேடு கிராமத்தில், குடிமராமத்து திட்டத்தின்கீழ், ரூ.50 லட்சம் செலவில் கொண்டியாறு வாய்க்காலின் குறுக்கே மறு கட்டுமானப் பணி செய்யப்பட்டுள்ள கடைமடை நீரொழுங்கி பணி முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் பி-20 பிரிவு வாய்க்கால் பாசன வசதி பெறும். 160 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும். காளாஞ்சிமேடு கிராமம் முழுமைக்கும் இது பயன்தரும். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தஞ்சாவூா் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வம், உதவிபொறியாளா் கனகரத்தினம், பாசனதாரா் சங்கப் பொறுப்பாளா்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT