நீடாமங்கலம்: பைரவசித்தர் திருமடத்தில் பெளர்ணமி சிறப்பு வழிபாடு
வலங்கைமான் வட்டம் பாடகச்சேரியில் பைரவசித்தர் திருமடத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டம் பாடகச்சேரியில் பைரவசித்தர் திருமடத்தில் பெளர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பைரவ சித்தர் ராமலிங்கசுவாமிகள் திருவுருவப்படத்திற்கு ஆராதனைகள் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் நவக்கிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பெளர்ணமியை முன்னிட்டு ஆபத்சகாயேஸாவரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
Advertisement
Advertisement
நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோயிலில் காசிவிசுவநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதிலும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.