ராமர் கோவில் விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லையா? கங்கனாவை விமர்சித்த திவ்யா!
நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத்தை நடிகையும் முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா விமர்சித்துள்ளார்.
நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத்தை நடிகையும் முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா விமர்சித்துள்ளார்.
நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் சில நாள்களுக்கு முன்பு தில்லி மாணவர்கள் போராட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர்களைப் பார்க்க அருவருப்பாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் நடவடிக்கைகள் வாந்தி வரவழைப்பதைப் போன்று இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தொடர்ந்து மாணவர்களின் போராட்டத்தை அவர் விமர்சித்துப் பேசி வருவது சமூக ஊடகங்களில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா கங்கனாவை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஜென் ஸீ தலைமுறையினருக்கு மரியாதையைப் பற்றி கங்கனா அறிவுரை வழங்குவதுதான் 2026-ன் சிறப்பம்சமே.
மோடி சிலருக்கு கடவுளாக இருப்பதாகவும், ஜென் ஸீ தலைமுறை அந்த மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறுகிறார்.
82 வயதான ஒரு விவசாயம் செய்யும் பெண்ணைப் பார்த்து ‘நீங்கள் வெறும் 100 ரூபாய் வாங்கத் தயாராக இருக்கிறீர்கள்’ என்று பேசியவர் இதே கங்கனாதான். கோடிக்கணக்கான பெண்களுக்கு அந்த விவசாயி அன்னதான கடவுள், அவரைத் தவறாகப் பேசுகையில் யாருடைய உணர்வுகளும் புண்படவில்லையா?
கடவுளைப் பற்றி பேசினால், ராமர் கோவில் விவகாரம் பற்றிப் பேசுவோம். எனக்கு ராமர்தான் கடவுள். ஒரு ஹிந்துவாக என்னுடைய உணர்வுகள் புண்பட்டுள்ளன. இதற்கு ஏன் கண்டனம் இல்லை?” எனப் பதிவிட்டுள்ளார்.
Did she not express condemnation regarding the Ram Temple issue? Divya criticizes Kangana!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.