முகப்பு
திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம்

நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 10 மார்ச் 2022, 1:04 pm IST
நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகளுக்கு நடந்த சிறப்பு ஹோமம்.
பகிர்:

நீடாமங்கலம்: நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரதலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த குருபகவான்.

இதனைமுன்னிட்டு காலை ஹோமம், மதியம் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதி, 1008 சங்காபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகளை கோயில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஹரிஹரன், கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.