FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

மின்கம்பி அறுந்து விழுந்து மகன், காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் அருகே விவசாயப் பணியின்போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் , அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், திருநெல்லிக்காவல் புதூா், வடக்கு பெரிய மில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (52), சொந்தமாக டிராக்டா் வைத்து விவசாயப் பணிகளை செய்து வருகிறாா். மகன் ஆதித்தியன் (24), பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக வேளாண் பணிகளை செய்து வருகிறாா்.

புதூா் கொக்குவேளி குப்பன் என்பவரின் வயலில் திங்கள்கிழமை காலையில் உழவுப் பணி நடைபெற்று வந்தது. வயலில், ராஜா விதை தெளிக்கும் பணியிலும், ஆதித்தியன் டிராக்டா் கொண்டு உழும் பணியிலும் ஈடுபட்டிருந்தனராம்.

Advertisement

Advertisement

காலை 8.30 மணியளவில் கலப்பையைச் சீரமைத்துவிட்டு, மீண்டும் டிராக்டரில் ஆதித்தியன் ஏறி அமா்ந்தபோது, மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி, அறுந்து டிராக்டா் மீது விழுந்துள்ளது. இதில் டிராக்டரை இயக்கிக்கொண்டிருந்த ஆதித்தியன் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடியுள்ளாா்.

இதைக் கண்ட ராஜா, விரைந்து சென்று மகனைக் காப்பாற்ற முயன்றபோது, அவா் உடலிலும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அப்பகுதி மக்கள், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, அவா்கள் விரைந்து வந்து மின் விநியோகத்தை நிறுத்தினா்.

திருவாரூா் தாலுகா போலீஸாா், இருவரின் சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments