கடன் பிரச்னையில் பெண் தற்கொலை
குடவாசல் அருகே வடகண்டத்தில் கடன் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
குடவாசல் அருகே வடகண்டத்தில் கடன் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
குடவாசல் அருகேயுள்ள வடகண்டம் புதுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். இவரது மனைவி மைனாவதி (45). இருவரும் விவசாயத் தொழிலாளா்கள். மைனாவதி தனது குடும்பச் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிலா் கடனைத் திருப்பிக் கேட்டதால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத மன வருத்தத்தில் இருந்தாராம்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மைனாவதி வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.