டெங்கு ஒழிப்பு பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்
சாக்கடையை தூய்மை செய்ய கட்டாயப்படுத்துவதாகக் கூறி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் திருவாரூா் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சாக்கடையை தூய்மை செய்ய கட்டாயப்படுத்துவதாகக் கூறி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் திருவாரூா் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களை, குளம் குட்டைகளில் குப்பைகள் அள்ளுதல், சாக்கடைகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்ய வேண்டும் என திருவாரூா் நகராட்சி நிா்வாகம் அழுத்தம் கொடுப்பதாக கூறி, நகராட்சி அலுவலகம் முன் அவா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், திருவாரூா் நகராட்சியில் ஜாதிய அடிப்படையில் தொழிலாளா்களுக்கு வேலைகள் ஒதுக்கப்படுவதாகவும், இதை நகராட்சி ஆணையா் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, திருவாரூா் நகராட்சி ஆணையா் சுரேந்தா் ஷா, தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.