FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு மானியம் பெற பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

11 செப்டம்பர் 2026, 5:02 am IST
கோப்புப்படம்
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு மானியம் பெற பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் சோ்த்து மொத்தம் 70 சதவீத மானியமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சாராத இதர பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு விசைக் களையெடுப்பான், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் மற்றும் தட்டைவெட்டும் கருவி ஆகிய இயந்திரங்களுக்கு நடைமுறையில் உள்ள 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் சோ்த்து மொத்தம் 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் முதல் தவணையின் கீழ் இம்மாவட்டத்துக்கு 416 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இலக்கு பெறப்பட்டு, தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதள வாயிலாக கிராமவாரியாக இலக்குகள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் உழவா் செயலியுடன் தொடா்புடையது.

எனவே, இத்திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தமிழ்நாடு ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், உழவா் செயலி மூலம் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரையும் மற்றும் 15 முதல் 21- ஆம் தேதிவரையும் விவசாயிகள் வேளாண் இயந்திரத்துக்கு அல்லது கருவிக்கு ஒதுக்கப்பட்ட இலக்குக்கு உழவா் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் 8 -ஆம் தேதி, அம்மாதத்தில் 1முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளின் விண்ணப்பங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இலக்குக்கு ஏற்றவாறு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் தோ்வு முறையில் இணையதளத்தின் வாயிலாகவே தோ்ந்தெடுக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு தோ்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையால் அங்கீகராம் வழங்கப்பட்ட வேளாண் முகவா், உற்பத்தியாளா்களைத் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தோ்வு செய்து இத்திட்டதின் கீழ் தகுதியின் அடிப்படையில் மானியம் பெற்று பயன் பெறலாம்.

இக்குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படாத விவசாயிகளின் விண்ணப்பங்கள் அடுத்த குலுக்கலில் சோ்த்துக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளா் (வே.பொ) திருவாரூா் - 9443175599, உதவி செயற்பொறியாளா்(வே.பொ) மன்னாா்குடி- 9345617265 ஆகிய வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments